சவுதியில் பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி பாடசாலை!
Tuesday, October 3rd, 2017
சவுதி அரேபியாவில் பெண்களுக்கான வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளியை திறக்க சவுதி பல்கலைகழகம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பெண்கள் வாகனம் செலுத்த விதிக்கப்பட்ட தடையை சவுதி அரேபிய அரசு நீக்கியுள்ளது. அதேவேளை அடுத்த வருடம் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் கார் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சவுதி பல்கலைகழகம் பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி பள்ளி திறக்கப்படும் என அறிவித்துள்ளது. இளவரசி நொரா பல்கலைக்கழகம் பெண்களுக்காக ஓட்டுநர் பயிற்சி பள்ளியை திறக்க திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
‘தவறான பாதையில் நாட்டை வழிநடத்தமாட்டேன் - பிரதமர் மோடி
இளவரசர் சார்லஸின் மியான்மர் பயணம் இரத்து?
படகு விபத்தில் 13 பேர் பலி - தென் கொரியாவில் பரிதாபம்!
|
|
|


