சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு!
Thursday, December 8th, 2016
முன்னாள் தமிழக முதமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை முன்னிட்டு சென்னை 14-வது சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஓவ்வொரு வருடமும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா இந்த வருடம் மார்கழி மாதம் 15ம் திகதி முதல் 22ம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சர்வதேச திரைப்பட விழாவில் உலகின் பல மொழிகளை சேர்ந்த ஏராளமான திரைப்படங்கள் திரையிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை முன்னிட்டு இந்த சர்வதேச திரைப்பட விழா (CIFF)எதிர்வரும் ஜனவரி மாதம் 5ம் திகதி முதல் 12ம் திகதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
வெடிக்கத் தொடங்கிய மெக்ஸிகோவின் எல் போபோ !
மியன்மார் படையினரின் வான்வழித் தாக்குதலில் 53 பேர் பலி!
அல்ஜசீராவின் ஊடகபணிகளை தடை செய்தது இஸ்ரேல் - சோதனை நடவடிக்கைகளையும் மன்னெடுத்துள்ளதாக தெரிவிப்பு!
|
|
|


