சபாநாயகர் மைக் மீண்டும் உடைப்பு: 3 மணிக்கு அவை ஒத்திவைப்பு!
Saturday, February 18th, 2017
இரகசிய வாக்கெடுப்பை வலியுறுத்தி சபாநாயகரை முற்றுகையிட்டு கடும் ரகளையில் திமுக உறுப்பினர்கள் ஈடுபட்டு வந்தனர். எதிர்கட்சி உறுப்பினர்களின் மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மேசையின் மீதும் இருக்கைகளையும் தட்டி ஒலி எழுப்பினர். நம்பிக்கை வாக்கெடுப்பினை வேறொரு நாளில் நடத்தவும், ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தவும் கோரி திமுக உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டனர். திமுக உறுப்பினர் பூங்கோதை மேசையின் மீதேறி கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து அவை 1 மணிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அமளியால் ஒத்திவைக்கப்பட்ட பேரவை மீண்டும் மதியம் 1 மணியளவில் கூடியது. அவை கூடியதும் எனக்கு நேர்ந்த கொடுமையை நான் எங்கே சென்று முறையிடுவது. அவை விதிகளின்படி தான் அவையை நடத்தி வருகிறேன் என்று சபாநாயகர் தனபால் கூறினார். மேலும் சட்டப்பேரவையின் மாண்புகளை சீர்குலைத்ததால் திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
பின்னர் திமுக உறுப்பினர்களை வெளியேற்ற முடியாமல் அவைக்காவலர்கள் திணறினர்.
இந்நிலையில், சபாநாயகரின் மைக் 2வது முறையாக உடைக்கப்பட்டது. அமைச்சர்களின் மீது திமுக உறுப்பினர்கள் ஏறி நின்று ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி முழக்கமிட்டனர். மீண்டும் தொடர்ந்து அமளி ஏற்பட்டதால் பேரவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைப்பட்டது.

Related posts:
|
|
|


