சசிகலாவால் 15 ஆண்டுகளாக துன்பத்தை அனுபவித்தேன் – பன்னீர்செல்வம்!

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் கூவத்தூர் விடுதியில் குண்டர்கள் காவலுக்கு இருப்பதாகவும் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியிருக்கிறார்.
கூவத்தூரில் சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்த சிறிது நேரத்திற்குப் பிறகு சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் தமது தொகுதி மக்களின் மன நிலையை அறிந்த பிறகு தங்கள் ஆதரவு யாருக்கு என்பதை முடிவுசெய்ய வேண்டுமெனக் கூறினார்.
உள்துறை முதல்வர் வசம் இருப்பதால், அந்த எம்.எல்.ஏ.க்களை ஏன் காவல் துறை மூலம் மீட்கக்கூடாது என கேள்வியெழுப்பப்பட்டபோது, அசாதாரண சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அம்மாதிரி நடவடிக்கையில் இறங்கவில்லையென்று கூறினார்.
Related posts:
எகிப்து விமான கடத்தலுக்கு தீவிரவாத சதி காரணம் அல்ல: சைப்ரஸ் அதிபர் தகவல்!
சுட்டுவீழ்த்தப்பட்டது ரஷ்ய உலங்குவானூர்தி!
வேகமாகப் பரவி வரும் நிபா வைரஸ் – கேரளா மாநிலம் முழுவதும் முடக்கப்படுமா என மக்கள் அசச்சம்!
|
|