கோழி வளர்ப்புக்கு எதிராக வழக்கு: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

Thursday, September 1st, 2016

சுவிட்சர்லாந்தில் கோழிப்பண்ணை வைத்திருக்கும் நபருக்கு எதிராக புகார் அளித்த நபருக்கு 36,000 பிராங்க் அபராதம் விதித்துள்ளது வாட் மாகாண நீதிமன்றம்.

சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில் குடும்பம் ஒன்று தங்களது வீட்டின் அருகாமையிலேயே பண்ணை ஒன்றை அமைத்து அதில் கோழிகளை வளர்த்து வந்துள்ளது.குறிப்பிட்ட அந்த குடும்பத்தின் அயராத உழைப்பினால் உள்ளூர் நிர்வாகத்தின் அனுமதியுடன் அந்த பண்ணையில் 2000 கோழிகளுக்கு மேல் வளர்க்கப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் இவர்களது குடியிருப்பின் அருகாமையில் குடியிருக்கும் நபரிடம் இருந்து 10 நாளுக்குள் குறிப்பிட்ட பண்ணையை காலி செய்ய வேண்டும் என கூறும் வக்கீல் நோட்டீஸ் ஒன்று வந்துள்ளது.குறிப்பிட்ட நபர் அந்த பகுதியில் நிரந்தரமாக குடியிருப்பவரல்ல என்ற போதும் இவர்களது பண்ணையின் அருகாமையில் அவரது நிலம் அமைந்திருந்தது.

பண்ணையை காலி செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை என உறுதியா இருந்த அந்த குடும்பம் குறிப்பிட்ட குறிப்புக்கு பதில் தருவதே இல்லை என முடிவு செய்தனர்.ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே அந்த நபர் மேலும் ஒரு சட்ட ரீதியிலான கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் தமது நிலத்தின் அருகாமையில் குறிப்பிட்ட பண்ணை அமைந்துள்ளதால், அந்த பறவைகளின் சத்தம் கேட்டு தமது நிலத்தின் மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது எனவும், அதபொருட்டு இழப்பீடு தொகையாக 97,000 பிராங்க் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் சிறிது கலக்கமுற்ற அந்த குடும்பம் தங்களது கோழிகளை இரவில் சத்தம் எதுவும் எழுப்பாத வகையில் பண்ணைக்குள்ளே இருக்கும்படி பார்த்துக்கொண்டனர்.ஆனால் இந்த பிரச்னை அப்படியும் முடிவுக்கு வரவில்லை, இறுதியில் நீதிமன்றம் செல்வதே இதற்கு தீர்வு என இரண்டு தரப்பும் முடிவுக்கு வந்துள்ளது.

இதனிடையே பண்ணையை அங்கிருந்து காலி செய்வாதாக இருந்தால் தாம் இழப்பீடு தொகையை இரத்து செய்யவும் தயார் என்று அந்த நபர் நீதிமன்றத்தில் அறிவித்தார்.ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து குறிப்பிட்ட குடும்பமும் தங்களின் தரப்பு வாதத்தை முன்வைத்தனர். 6 மாதங்கள் நடைபெற்ற் இந்த வழக்கின் வாதங்களை கேட்ட நீதிமன்றம் குறிப்பிட்ட நபரின் வழக்கினை ரத்து செய்தது.

மட்டுமின்றி சட்ட செலவினங்களுக்காக 21,642 பிராங்க் வழங்க வேண்டும் எனவும் மற்று செலவினங்களுக்காக 15,000 பிராங்க் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Related posts: