கோரத் தாண்டவம் ஆடும் கொரோனா- பிரான்சில் நேற்றைய நாளில் 2,886 பேர் பலி!

Monday, April 6th, 2020

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதிலும் இதுவரையில் 12 இலட்சத்து 72,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,424ஆக பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 36,673ஆக பதிவாகியுள்ளதோடு அந்நாட்டில் நேற்றைய தினத்தில் ஆயிரத்து 165 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் அமெரிக்காவில் மொத்தமாக 9 ஆயிரத்து 616 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகியுள்ளனர்

இத்தாலியில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 887ஆக பதிவாகியுள்ள அதேவேளை, நேற்றைய நாளில் ஸ்பெய்னில் 694 பேர் பலியானதோடு அங்கு இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 641ஆக அதிகரித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் நேற்றைய தினம் 2 ஆயிரத்து 886 பேரின் உயிரை கொரோனா வைரஸ் பறித்ததோடு, அங்கு மொத்தமாக 8 ஆயிரத்து 78 பேர் குறித்த தொற்றின் காரணமாக பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: