கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு – பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகம் அறிவிப்பு!
Sunday, April 5th, 2020
தற்போது உலகில் மனித உயிர்களை அதிகளவில் காவுகொண்டுவரும் நோயான கொரோனா நோய் கட்டுப்படுத்த முடியாதளவு வேகமாக பரவி வருவதை அடுத்து அதை குணப்படுத்தும் மருந்துகளையும், தடுப்பு மருந்துகளையும் கண்டுபிடிக்க பெரும்பாலான நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் அமெரிக்கா கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக செய’;திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் அமெரிக்காவில் உள்ள பீட்டர்ஸ்பர்க் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேராசிரியர் ஆன்ட்ரியோ கம்போட்டா, லூயிஸ் பாலோ உள்ளிட்டவர்கள் தலைமையிலான நிபுணர்கள் குழு இந்த மருந்தை உருவாக்கி உள்ளது. இதே குழுவினர் 2003 ஆம் ஆண்டு சார்ஸ் நோய்க்கும், 2014 ஆம் ஆண்டு மெர்ஸ் நோய்க்கும் மருந்து கண்டுபிடித்தனர்.
இந்த தடுப்பு மருந்தை எலிக்கு செலுத்தி பரிசோதித்த நிலையில் அது வெற்றிகரமாக செயல்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் மேலும் சில பரிசோதனைகள் நடத்த வேண்டியுள்ளதுடன் இந்த மருந்துக்கு அமெரிக்க உணவு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, புதிய மருந்து ஆய்வு அமைப்பு ஆகியவற்றின் ஒப்புதல் பெற வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும் அனைத்து பணிகளும் முடிந்து குறித்த மருந்து பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் ஒரு வருட காலம் வரை ஆகலாம் என்றும் நிபுணர் குழுவினர் கூறியுள்ளனர்.
அதேவேளை அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான தியோடர் ரூஸ்வெல்டில் பணியாற்றும் 114 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரொனாவினால் சர்வதேச ரீதியில் 11 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக அமெரிக்காவில் 2 லட்சத்து 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அடுத்த படியாக ஸ்பெயினில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டதுடன் 11 ஆயிரத்து 700 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா உயிரிழப்புக்களில் அதிகபடியாக இத்தாலியில் 14 ஆயிரத்து 681 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


