கொரோனா கோரத் தாண்டவம்: ஒருநாளில் 260 உயிரிழப்பு – பிரித்தானியாவில் பிணவறையாக மாறிய விமான நிலையம்!

கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸால் கடந்த சில மாதங்களாக உலக மனிதர்களின் உயிர்கள் மாய்ந்துவரும் நிலையில், பிரித்தானியாவில் ஒரு நாளில் 260-பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவில் இறாந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,019- ஐ எட்டியுள்ளதாக சுகாதார துறை அறிவித்துள்ளது.
இக் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் உலகத்தில் இறப்பு வீதம் கூடிக்கொண்டு வருகின்றதே தவிர குறைந்தமாதிரி புள்ளிவிபரங்கள் தெரிவிக்கவே இல்லை.
மேலும் பிரித்தானியாவில் இவ்வாறு அதிகமானோர் நாளொருவண்ணம் இறந்துவரும் நிலையில் பேர்மிங்கம் விமான நிலையத்தை பிணவறையாக மாற்றுவதற்கு நடவடிக்கையும் நடந்துகொண்டுவருகின்றது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி அதிகரித்துவரும் பாதிப்பு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு பேர்மிங்காம் விமான நிலையத்தில் தற்காலிக பிணவறை ஒன்றை உருவாக்கி வருகின்றனர்.
Related posts:
தற்கொலை குண்டு தாக்குதல்கள்: விசாரணைகுள் அகப்படும் பாதுகாப்பு அதிகாரிகள்?
தனிமைப்படுத்தலுக்கு அழைத்துவரப்பட்டமை தொடர்பில் தெரியாது! வடக்கு சுகாதாரப் பணிப்பாளர் தெரிவிப்பு
இஸ்ரேலில் வேலை வாய்ப்பு - எந்தவொரு வெளி முகவர்களிடமும் பணம் செலுத்த வேண்டாம் - வெளிநாட்டு வேலைவாய்ப்...
|
|