குவைத் பிரதமர் இராஜினாமா!

குவைத் பிரதமர் ஷேக் ஜாபர் அல்-முபாரக் அல்-சபா திடீரென்று இராஜினாமா செய்துள்ளார் எனவும் அவரின் இராஜினாமாவை குவைத் அமீர் தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் புதிய அரசு அமைக்கப்பட்டது. இந்நிலையில் பாராளுமன்றம் தற்போது கலைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த வியாழக்கிழமை நடந்த தேசிய சட்டமன்ற கூட்டத்தில் பேசிய சபாநாயகர் மர்சூக் அல் கானிம் நடப்பு அரசு கலைக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கருத்து தெரிவித்திருந்தார்.
தகவல் தொடர்பு மந்திரி முகம்மது அல் சபா பேசும்போது, “சட்டம் இயற்றக்கூடிய பணியில் உள்ளவர்கள் பட்ஜெட் மற்றும் சட்ட விதிகளை மீறி நிர்வாகத்தை சரிவர கவனிக்காததால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும்” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.
Related posts:
செல்பி மோகத்தால் உயிரிழந்த வீராங்கனை!
14 இலட்சம் சிறுவர்கள் பட்டினியால் உயிரிழக்கலாம் - எச்சரிக்கிறது யுனிசெப்!
ட்ரம்பிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
|
|