குஜராத் வெள்ள அனர்த்தம்: 126 பேர் உயிரிழப்பு!

குஜராத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அசாம், குஜராத், ஒடிசா, அரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு சுமார் 1 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இந்த நிலையில் குஜராத்தில் வெள்ளம் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்படுவதோடு 55 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு குஜராத் அரசு சார்பில் தலா 4 இலட்சம் ரூபாயும், பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா 2 இலட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, அடை மழை தொடர்வதன் காரணமாக மீட்புப் பணிகள் தாமதமடைந்துள்ளதாகவும் இதனால் மேலும் 12 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் குறித்த மாநிலத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|