கோர விபத்திலிருந்து தப்பித்த இரு விமானங்கள்!

Friday, June 15th, 2018

ஆஸ்திரேலியாவின் ‘குவாண்டா’ நிறுவன விமானம் இரு நாட்களுக்கு முன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சிலிருந்து மெல்போன் நகருக்கு புறப்பட்டது. பசிபிக் பெருங்கடலின் மீது பறந்து கொண்டிருந்தபோது காற்றின் சுழற்சியால் அதன் மீது மோதுவது போல மற்றொரு விமானம் வந்தது கடைசி நேரத்தில் அறியப்பட்டது.

இரண்டும் மோதுவதை தடுக்க ஆயிரம் அடி உயரத்துக்கு கீழே குவாண்டா விமானத்தை இறக்க விமானிகள் துரிதமாக முடிவெடுத்தனர். அதன்படி 20 நொடிகள் வரை விமானத்தை தலைகீழாக இயக்கிய அவர்கள் பாதுகாப்பான இடத்தை அடைந்தனர். என்ன நடக்கிறதென அறியாமல் பயணிகள் குழப்பமடைந்தனர்.

பின்னர் பயணிகளுக்கு நடந்தவை குறித்து விளக்கப்பட்டதாக குவாண்டோ விமான நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. நடுவானில் ரோலர்கோஸ்டரில் சென்றது போல இருந்ததாகவும் நிலைமையை விமானிகள் சிறப்பாக கையாண்டதாகவும் பயணிகள் கூறினர்

Related posts: