குஜராத் கடலில் 9 பேருடன் வந்த பாகிஸ்தான் மர்ம படகு !

Sunday, October 2nd, 2016

குஜராத் கடற்பகுதியில் 9 பேருடன் வந்த பாகிஸ்தான் மர்ம படகு ஒன்றை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தள்ளனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதை அடுத்து எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. எல்லையில் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவ செய்து தாக்குதலை முன்னெடுக்கலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. எனவே எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் நோக்கில் நாடு முழுவதும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கடல் எல்லையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் கடலோர காவல் படையினர் ஊடுருவல் நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்துக்கு இடமான வகையில் கடலில் ஏதேனும் படகுகள் தென்பட்டால் உடனே தெரிவிக்குமாறு இந்திய மீனவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் குஜராத் மாநில கடற்பகுதியில் கடலோர காவல் படையின் ’சமுத்ரா பவக்’ கப்பல் காலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது சுமார் 10.15 மணியளவில் பாகிஸ்தானை சேர்ந்த மர்ம படகு ஒன்று அந்த வழியாக வந்தது கண்டறியப்பட்டது.

உடனே கப்பலில் சென்று அந்த படகை சுற்றிவளைத்த வீரர்கள், அதை சிறைப்பிடித்தனர். பின்னர் படகில் சோதனையிட்ட போது அதில் 9 பேர் இருந்தது கண்டறியப்பட்டது. உடனே அந்த படகையும், அதில் இருந்தவர்களையும் போர்பந்தருக்கு கொண்டு சென்ற கடலோர காவல் படையினர், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் படகில் இருந்த 9 பேரும் பாகிஸ்தான் மீனவர்கள் என கண்டறியப்பட்டதாக தெரிகிறது. எனினும் தொடர்ந்து அவர்களிடம் கூட்டு விசாரணை நடத்தி வருவதாக கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

625.0.560.320.160.600.053.800.668.160

Related posts: