குகையில் சிக்கிய கால்ப் பந்தாட்ட வீரர்களைத் தேடும் பணிகள் தீவிரம்!
வட தாய்லாந்தில் உள்ள குகை ஒன்றில் சிக்கிய 12 உறுப்பினர்களைக் கொண்ட கால்பந்தாட்ட அணியை தேடும் முயற்சியில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சியாங் ரே மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் நங் நொன் குகைக்குள் நுழைந்த நிலையில், திடீர் என ஏற்பட்ட மழையுடனான வெள்ளம் காரணமாக அவர்கள் குகையினுள் அகப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளை கவரும் இந்த குகை பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலத்திற்கு அடியில் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்பந்தாட்ட அணியினர் பிரதான குகையில் இருந்து பிரிந்து செல்லும் கிளை குகைகளிற்கு சென்றிருந்த வேளை வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் இதனால் குகையில் 16 அடி வரையில் நீர் மட்டம் உயர்வதற்கான ஏதுநிலை உள்ளதாகவும் காவல்துறை உயர் அதிகாரி கொம்சன் சார்துவான் (Komsan Saardluan)தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை முதல் இவர்களை தேடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று தாய்லாந்தின் கடற்படை சுழியோடிகள் குகைக்குள் நுழைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஜென்ரல் புரோவிற் வொங்சுவான் (Prawit Wongsuwan) குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|
|


