செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 06 ஜனவரி 2002 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Tuesday, May 24th, 2016

கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே!

“ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதே எமது வேலையாகும்” என்று கௌரவ பிரதமரவர்கள் கூறியிருப்பதை ஈழமக்கள ஜனநாயகக் கட்சியினராகிய நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம். ஜனநாயகம் என்ற பெயரால் ஜனநாயக நடைமுறைகளினூடாகப் பதவிகளை பெற்றுக் கொண்டுள்ள சிலர் கூட அராஜகத்துக்கு துதி பாடிக் கொண்டும் அராஜகப் பாசிச சக்திகளுக்கு முன் நிராயுதப்பாணிகளாக்கி பலிகடாக்களாக்க வேண்டுமென கூச்சல் போட்டுக் கொண்டும் இருக்கின்ற தமிழ் மக்களின் அரசியல் சூழலில், ஜனநாயகத்தை நிலைப்படுத்துவது அத்தியவசியமானதாகும்.

பிரதமரதும் புதிய அரசாங்கத்தினதும் ஜனநாயக உறுதிப்படுத்தல் என்னும் எண்ணக்கருத்து ஏகப்பிரதிநிதிகள் என்று முத்திரையிடுபவர்களுக்குக் கசப்பானதாக இருக்கலாம். ஆனால் தமிழ் பேசும் மக்களுக்கு அது இனிப்பானதாகவே இருக்கும். ஏனெனில் இந்திய அமைதிப் படையினர் வெளியேறியபொழுது சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் குடும்பங்களுடன் நாட்டை விட்டு வெளியேறியது போன்ற நிழ்வுகள் மீண்டும் தொடராது என்பதற்கான உத்தரவாதமாக இது இருக்கின்றது என்பதனாலாகும். ஜனநாயக அரசியலில் போட்டிகள் நிகழ்வதும் அதிகாரக் கைப்பற்றலுக்கான முரண்பாடுகள் காணப்படுவதம் சகஜம். எனினம் இந்தப் போட்டிகளம் முரண்பாடுகளும் மோதல்களாக மாறுவதும் உயிர்கள் பலி கொள்ளப்படுதல் வரை செல்வதும் கவலைக்குரியதும் கண்டனதுக்குரியதுமாகும்.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவிட்ட தேர்தல் வன்முறைச் சம்பவங்ளோடு ஒப்பிடுகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நடந்த துர்ப்பாக்கியச் சம்பவங்கள் மிகக் குறைவானதே. எனினும் இத்தகைய சம்பவங்கள் கூட இடம்பெறாது தவிர்க்க பல்வேறு தரப்பினரும் முயற்சிகள் மேற்கொண்டிருக்கலாம். வடக்கு –  கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் தொடாபான வன்முறைச் சம்பவங்கள் என்பதை விட கருத்து ரீதியான மோதல் சம்பவங்கள் இடம்பெற்றமை பற்றியே கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும்.

மண் மீட்பு தமிழின உணர்வு என்னும் உணர்ச்சியூட்டல்களுக்குப் பின்னால் அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் தொடர்ந்து கொண்டிருந்தன. மண் மீட்புக்கும் தமிழின உணர்வுகளுக்கும் நாங்கள்  எதிரானவாகளோ விரோதமானவர்களோ அல்ல. ஆனால் மக்களின் வாழ்வுக்கு முதன்மையான இடம் கொடுக்கப்படவேண்டும். தமிழின உணர்வென்பது தமிழ் மக்களின் வாழ்வுக்கு அப்பாற்பட்டதல்ல என்பதற்காகவே நாங்கள் கருதுகின்றோம். நான்கு கட்சிகளின் கூட்டமைப்பினர் பிரயோகித்திருந்த கருத்து ரீதியான அடக்குமுறையைக் கடந்து தேசிய ஐக்கியம் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை எனனும் கருத்து ஆக்கத்தை ஏற்படுத்த நாம் பாடுபட்டமையை இந்தச் சபை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வடக்கு – கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பலர் புலிகளோடு அரசாங்கம் பேச வேண்டுமென்று கூறினார்களே தவிர என்ன விடயங்கள் பேசப்படலாம். எத்தகைய இணக்கங்கள் காணப்படலாம். என்பது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.எனினும் எமது கட்சியின் செயற்பாடுகள் மற்றும் அணுகுமுறைகள் தொடர்பாக கண்மூடித்தனமான முறையில் சேறு பூசும் விடயங்களே முன்வைக்கப்பட்டிருந்தன. வன்முறைச் சம்பவங்கள் ஒருபுறமிருக்க யாழ்ப்பாணத்தில் தேர்தல் மோசடியொன்றில் நாம் ஈடுபடப் போவதாகப் பெரும் பிரசாரப் போரொன்று எமக்கெதிராகக் கட்டவீழ்த்து விடப்பட்டிருந்தது. குடாநாட்டில் வாக்களிப்பின் போது இடம்பெறக்கூடிய மோசடிகளைத் தடுப்பதற்கான விஷேட எற்பாடுகளைத் தேர்தலுக்கு இரு தினங்களுக்க முன்னர்தான் தேர்தல் ஆணையாளர் அறிவிப்பாரென 07-11-2001 ஆந் திகதியன்று “உதயன்” நாளிதழில் வெளியான தலைப்புச் செய்தியும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தேர்தலை இடைநிறுத்த வேண்டி வரலாமென்று தேர்தல் அவதானிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து எச்சரித்ததாக 23-11-2001 இல் வெளியான “உதயன்” நாளிதழின் தலைப்புச் செய்தியும் முறைகேடுகள் இடம்பெற்றால் மீண்டும் வாக்களிக்க வற்புறுத்துவோமென்று ஐரோப்பிய யூனியன் கண்காணிப்பாளர்கள் தெரிவித்ததாக 20-11-2001 இல் “உதயன்” நாளிதழில் வெளியான தலைப்புச் செய்தியும் இதற்குத் தக்க சான்றுகளாகும்.

Just two minutes, please! இந்தச் செய்திகள் எம்மையும் எமது செயற்பாடுகளையும் மறைமுகமாக சுட்டிக் காட்டி நாம் தேர்தல் மோசடிகளில் ஈடுபடப் போவதாகக குறிப்பிட்டு நிற்க மாற்றுச் சக்திகள் மிகச் சுலபமாகத் தேர்தல்; மோசடிகளில் ஈடுபட்டன. இது “கள்வன்! கள்வன்!” எனக் கூக்குரலிட்டபடி களவு வேலைகளில் ஈடுபடுவதற்கு ஒப்பானதாகும். “கள்வன்! கள்வன்” எனக் கூக்குரலிடுவதன் மூலம் அனைவரது கவனத்தையும் திசை திருப்பிவிட்டு களவு செய்வது போல யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக அங்கு போட்டியிட்ட புதிய ஜனநாயகக் கட்சியின் முதன்மை வேட்பாளர் பகிரங்கமாகவே கருத்து தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிட வேண்டியதாகும். தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்கள் வன்முறைகளுக்குச் சான்றாக எமது கட்சியினர் மீது கட்டவீழ்த்து விடப்பட்டிருந்த சில சம்பவங்களின் பட்டியலை இச்சபையில் சமர்ப்பிக்கின்றேன்.

  • நூல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சபையில் இன்று காலையில் பேசிய ஓர் உறுப்பினர் தனக்கு நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அப்போது என்னுடைய பெயரையும் குறிப்பிட்டிருந்தார். அவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் இங்கு நான் அவரைச் சந்தித்த போது மனிதப் பண்பு காரணமாகவே ளழசசல  என்றவொரு வார்த்தையைப் பயன்படுத்தினேனேயொழிய அந்தச் சம்பவத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இருக்கின்றதென்ற வகையில் நான் மன்னிப்புக் கோரவில்லை. காலையில் இங்கு கடமையாற்றும் ஓர் ஊழியர் காலை நொண்டிக் கொண்டு வந்தபோது கூட அவரிடம் நான் “ஏன் காலை நொண்டிக் கொண்டு வருகிறீர்?” என்று கேட்டதற்கு அவர் தான் ஒரு விபத்தில் சிக்கியதாகக் கூறினார். அப்போது நான் அவரிடம் ளழசசல என்ற சொன்னேன். அது மனிதப் பண்பு காரணமாகக் கூறப்பட்ட சொல்லே தவிர அந்தச் சம்பவத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமிருப்பதாகக் கருதி மன்னிப்பு கேட்கும் நோக்கத்திலல்ல. உண்மையில் அந்த  உறுப்பினருக்கு நிகழ்த சம்பவத்திற்கும் எமக்கும் எந்;த வகையிலும் சம்பந்தமில்லை.உண்மையில் தீவுப் பகுதி மக்களின் விரோதத்தைச் சம்பாதித்திருந்த காரணத்தில்தான் அவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருக்காலமென நான் இந்தச் சபையில் குறிப்பிட விரும்புகின்றேன். நன்றி.

06 ஜனவரி 2002

Related posts: