கிழக்கு கெளத்தாவில் சிரிய படை தொடர்ந்தும் கடும் மோதல்!
Thursday, February 22nd, 2018
சிரியாவின் கிழக்கு கெளத்தா பிராந்தியத்தில் மூன்றாவது நாளாக கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற பயங்கர வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதன்மூலம் அந்த பிராந்தியத்தில் கடந்த 48 மணி நேரத்தில் பலியான பொதுமக்களின் எண்ணிக்கை 250 தாண்டியுள்ளது.
சிரிய அரச படையின் முற்றுகையில் உள்ள இந்த பிராந்தியத்தில் 2013 இல் இடம்பெற்ற இரசாயன தாக்குதலுக்கு பின்னர் அதிக உயிரிழப்புக் கொண்ட இரண்டு தினங்களாக இது மாறி இருப்பதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
செவ்வாய்கிழமை இடம்பெற்ற குண்டு மழையில் 106 பேர் பலியானதாக பிரிட்டனை தளமாகக் கொண்டு இங்கும் மேற்படி கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதியில் இரண்டு நாட்களில் ஆறு மருத்துவமனைகள் தாக்கப்பட்டுள்ளன. இதன்போது பலரும் கொல்லப்பட்டிருப்பதோடு மூன்று மருத்துவமனைகள் முற்றாக செயலிழந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.
“கடந்த 48 மணிநேரத்திற்குள் கிழக்கு கெளத்தாவில் ஆறு மருத்துவமனைகள் மீது பங்கர தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் செய்தி பற்றி நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன்” என்று சிரிய பிரிச்சினை தொடர்பான ஐ.நா பிராந்திய மனிதாபிமான இணைப்பாளரான பனோஸ் மெளட்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா குறிப்பிட்டிருக்கும் ஆறு மருத்துவமனைகள் தவிர மற்றொரு பிரதான மருத்துவமனை தாக்குலுக்கு இலக்காகி செவ்வாயன்று செயலிழந்ததாக சிரிய அமெரிக்க மருத்துவ சமூகம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
|
|
|


