கிரீஸில் பாரிய நிலநடுக்கம்!

Monday, June 25th, 2018

தென் கிரீஸின் மெதோனி நகருக்கு அருகில் கடலில் பயங்கர நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.

ரிக்டர் அளவுகோளில் 5.5 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து சுமார் 30 கிலோமீற்றர் ஆழத்தில் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக நகரின் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

இருப்பினும் இதன் காரணமாக ஏற்பட்ட உயிர் அல்லது சொத்து சேதங்கள் தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts: