காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இந்திய பிரதமர் அமைச்சர்களுடன் விசேட ஆலோசனை!
Monday, September 19th, 2016
இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரில், இராணுவ தளத்தில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலளிப்பது எவ்வாறு என்பது பற்றி விவாதிக்க தலைநகரான டெல்லியில் மூத்த அமைச்சர்களோடு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூட்டம் நடத்தி வருகிறார்.
சமீபத்திய மிகவும் மோசமான இந்த தாக்குதலில் 17 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிற தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு இந்த தாக்குதலுக்கு காரணம் என்று இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடாக இருக்கிறது என இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அரசு உறுதியாக மறுத்துள்ளது,

Related posts:
கலெக்டர் ஆனார் பி.வி. சிந்து!
பாடசாலையாக கருதப்பட்ட முகாம் ஒன்றிலிருந்து சுமார் 500 பேர் மீட்பு!
இந்தோனேசியாவில் இரண்டு அதிசக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்!
|
|
|


