கார் குண்டுவெடிப்பு – சிரியாவில் 5 பேர் உயிரிழப்பு!
Tuesday, December 18th, 2018
சிரியாவில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் சிக்கி அப்பாவி மக்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் உள்ள அப்ரின் மாவட்டம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ளது.
இந்த நகரில் உள்ள புகழ்பெற்ற சந்தையில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்து வெடிக்க செய்தனர்.
இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காரை ஓட்டி வந்த பயங்கரவாதிகள் இதில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
Related posts:
அமெரிக்க அரசின் இணையதளங்களில் ஊடுருவியதில் ரஷியாவுக்கு தொடர்பு?
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி வெளியானது!
ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என உண்மையை மறைத்தோம் -அப்பல்லோ தலைவர் அதிரடி!
|
|
|


