காபூலில் குண்டு வெடிப்பு – 24 பேர் பலி!
Tuesday, September 6th, 2016
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த இரண்டு குண்டு வெடிப்புகளில், 24 பேர் கொல்லப்பட்டனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில், பல மூத்த பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்குவர் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த குண்டு வெடிப்புகளில் 90-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர். நகரின் மக்கள் நெரிசலான பகுதியில் விரைவாக அடுத்தடுத்து நடந்த இந்த குண்டு வெடிப்புகளுக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக தாலிபன் அமைப்பு தெரிவித்துள்ளது.
முதல் குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு உதவ மக்கள் விரைந்து கொண்டிருக்கும் போது, இரண்டாவது குண்டை ஒரு தற்கொலைப் படை தாக்குதல்தாரி வெடிக்கச் செய்ததாக செய்திகள் கூறுகின்றன. இந்த குண்டு வெடிப்பு தாக்குதல்கள் குறித்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

Related posts:
ரோஹிஞ்சா இன மக்கள் படுகொலைக்கு மலேசிய பிரதமர் கண்டனம்!
ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசல் மீது தற்கொலைப்படை தாக்குதல் -29 பேர் பலி!
நாடுகடத்தும் மசோதா மீளப் பெறப்பட்டது!
|
|
|


