காபுல் தற்கொலை குண்டு தாக்குதல்: ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு!

ஆப்கானிஸ்தானின் காபுலில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் காபுலில் இடம்பெற்ற திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 63க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன் 182 பேர் காயமடைந்தனர்.
சுமார் 1,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்ட திருமண நிகழ்வில் நேற்றிரவு(17) இந்த தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
விருந்தின்போது இசைக் கச்சேரி நடத்தப்பட்டதுடன். கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருந்தபோது, மேடையருகே வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்துச் சிதறியுள்ளதாக ஆப்கான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
சுவாதியை தேடி வந்த பெங்களூரு மனிதர்கள்யார்?
தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை பிரஜாவுரிமை – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!
சீனாவில் 113 பயணிகளுடன் வானில் பறந்து கொண்டிருந்த போயிங் ரக விமானம் மலைப் பகுதியில் விழுந்து விபத்து...
|
|