சுவாதியை தேடி வந்த பெங்களூரு மனிதர்கள்யார்?

Friday, July 8th, 2016

சுவாதி கொலை வழக்கில் உண்மையான விசாரணையே இப்போதுதான் தொடங்கி உள்ளது என்று விவரம் அறிந்தவர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். அதனால்தான் கமிஷனர் ஆபீஸ் வட்டாரத்துக்குப் போனேன்.

சுவாதி கொலை வழக்கை முதலில் ரயில்வே போலீஸ் விசாரித்தது. அதன்பிறகு, அது சென்னை மாநகர போலீஸ் வசம் வந்தது.

இப்போது அது என்.ஐ.ஏ என்று சொல்லப்படும் தேசியப் புலனாய்வு ஏஜென்சியின் வசம் ஒப்படைக்கப்படலாமோ என்ற நிலைமை எழுந்துள்ளது. அந்த ஏஜென்சியைச் சேர்ந்த அதிகாரிகள் சத்தமில்லாமல் இங்கு வந்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

சுவாதி பெங்களூருவில் வேலை பார்த்தவர். அங்கு அவருக்கு இருந்த நண்பர்கள், நட்பு வட்டாரம் ஆகியவற்றைப் பற்றிச் சில சந்தேகங்கள் மெல்ல வெளியில் வர ஆரம்பித்து உள்ளன.

சுவாதியை யாரோ ஒருவர் அடித்தார் என்று தமிழ்ச்செல்வன் என்பவர் சொல்கிறார் அல்லவா? அவரேதான், அடித்த இளைஞன் ராம்குமார் அல்ல என்றும் சொல்கிறாராம்.

அப்படியானால், சுவாதியை அடித்த அந்த இளைஞன் யார்? இதுதான் மிக முக்கியமான சந்தேகமாக உள்ளது.

பெங்களூரு கம்பெனியில் சுவாதி வேலை பார்த்தார். அப்போது அவருக்குச் சில நண்பர்கள் அறிமுகம் ஆனார்கள். அதன்பிறகு அவர் அந்த இடம், சூழ்நிலை பிடிக்காமல் சென்னைக்கு வந்துள்ளார்.

அதில் ஒன்றிரண்டு பேர் வந்து சுவாதியை மிரட்டிச் சென்றுள்ளார்கள். அநேகமாக தமிழ்ச்செல்வன் பார்த்த ஆள் பெங்களூரு நபராக இருக்கலாம். அந்த நபர்கள் எதற்காக ஒரு பொது இடத்தில் ஒரு பெண்ணை அடிக்க வேண்டும்?

அவர்கள், சுவாதியிடம் இருந்து என்ன தகவலைப் பெற முயற்சித்தார்கள்? இந்தப் பின்னணி ஆராயப்பட வேண்டும்’ என்று விவரம் அறிந்தவர்கள் சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள்.

இவை சர்ச்சைக்குரியவையாகவும் அதில் இன்னும் பலமான ஆதாரங்களும் இல்லை என்பதால், அதுபற்றித் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.

ராம்குமார் தனது ஒரு தலைக்காதல் மோகத்தால் இந்தக் கொலையைச் செய்தார் என்று போலீஸ் சொல்வதை நம்பினாலும், அதை மீறி சுவாதிக்கு வேறு ஏதோ ஒரு அச்சுறுத்தல் இருந்து உள்ளது என்று அவர்கள் சொல்கிறார்கள்.

ராம்குமார்தான் கொலையாளி என்று முடிவுசெய்த போலீஸ், உடனடியாக அவரைக் கைதுசெய்யாமல், ஏதோ மிகப் பெரிய தீவிரவாதியைக் கைதுசெய்யப் போவது போல், ஊரில் உள்ள விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு, அவரைக் கைதுசெய்யச் சென்றது ஏன்?

இத்தனைக்கும் அங்கு அவர் சாதாரணமாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவர். அவரை அவரது ஊரில் இரண்டு நாட்களாக போலீஸ் மறைமுகமாகக் கண்காணித்து உள்ளது. அவரைக் கைதுசெய்ய விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு, நள்ளிரவு வரை காத்திருந்துப் போக வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

ஆனாலும் போலீஸ் அப்படிப் போனது ஏன் என்று சந்தேகங்கள் கிளப்புகிறார்கள். ‘ஏதோ பெரிய நெட்வொர்க் கொண்ட நபராக இருக்கலாம்’ என்று போலீஸை யோசிக்கவைத்த சூழ்நிலை என்ன என்பதுதான் இப்போதைய கேள்வி!

ம்! – சுவாதியின் செல்போனை ராம்குமாரிடம் இருந்து கைப்பற்றியதாக போலீஸ் சொல்கிறது. ஆனால், அவரது லேப்டாப் பற்றி இதுவரை எந்தப் பேச்சும் இல்லை.

செல்போனில் இருந்த விஷயங்கள் என்ன என்ற தகவலும் வெளிவரவில்லை. லேப்டாப் பற்றி பேச மறுக்கிறது போலீஸ்.

பெங்களூரு நண்பர்கள் சுவாதியை அடிக்கடி அந்த லேப்டாப்பில் உள்ள தகவல்களை அழிக்கும்படி கூறி மிரட்டியதாக, சுவாதியின் நண்பர்கள் சிலர் இந்த வழக்கின் ஆரம்பத்தில் தெரிவித்தனர்’ என்கிறார்கள்.

அப்படியானால், அந்தத் தகவல்கள் என்ன என்பது இன்னமும் கேள்விக்குறியாக உள்ளது.ராம்குமாருடன் விடுதியில் தங்கியிருந்து அவருக்கு உதவிகள் செய்தவர் என்ன ஆனார்?

கொலைக்குப் பயன்பட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதம் கர்நாடக மாநிலத்தில் பயன்படுத்தப்படுவது என்று முதலில் சொல்லப் பட்டது.

பெங்களூருக்கும் இந்த அரிவாளுக்கும் தொடர்பு உள்ளதே.சுவாதியின் டிசம்பர் மாத முகநூல் பக்கத்தில், ‘நீ என்னை முந்திக்கொள்வதற்குள் நான் உன்னை முந்திக்கொள்வேன், நான் ஏமாற மாட்டேன்’ என்றொரு பதிவை, சுவாதி போட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

சுவாதிக்கும் ராம்குமாருக்கும் ஃபேஸ்புக்கில் மியூச்சுவல் ஃப்ரெண்டாக இருந்தவர் சூரிய பிரகாஷ். சுவாதி இறந்ததும், அவரது நண்பர் என்கிற பேனரில் முகமது பிலால் சித்திக் தன்னை வெளியே காட்டிக்கொண்டார்.

ஆனால், சூரிய பிரகாஷ் ஏனோ தன்னைக் காட்டிக்கொள்ளவே இல்லை. இவர் யார்? ஏன் மௌனமாக இருக்கிறார்? போலீஸ் ஏன் அவரை விசாரிக்கவில்லை?

கடந்த 5-ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ராம்குமார். யாரிடமும் பேசாமல் அமைதியாகவே ராம்குமார் இருக்கிறார். சிறையில் திட உணவுகளைச் சாப்பிடுகிறார்.

ராம்குமாரை சிறையில் உள்ள டாக்டர்கள் குழுவினர் பரிசோதித்தனர். அப்போது, ராம்குமாரிடம், ‘கழுத்தில் வலி இருக்கிறதா?’ என்று கேட்டபோது ‘இல்லை’ என்று ஒற்றை வரியில் பதிலளித்துள்ளார்.

கொலைக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மனுப் போட்டுள்ளார் ராம்குமார். ஜாமீன் மனு மீதான விசாரணை நடக்கும்போது பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வரலாம்” என்றபடி ஜூனியர் விகடனில் மிஸ்டர கழுகு பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts: