காசாவில் கடலில் விழுந்த உதவிப்பொருட்கள் எடுக்க முயன்ற 12 பேர் கடலில்மூழ்கி உயிரிழப்பு!

காசாமீது வான்வெளி ஊடாக வீசப்பட்ட உதவிப்பொருட்கள் கடலில் விழுந்த வேளை அவற்றை எடுக்க முயன்ற 12 பேர் கடலில்மூழ்கி உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தீவிரத் தாக்குதல் காரணமாக காசாவில் வாழும் மக்கள் போரினாலும் ,பட்டினியாலும் உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த மக்களுக்கு உதவும் விதமாக 18 பொதிகளில் மனிதாபிமான உதவிகளை பரசூட் மூலம் வழங்க பென்டகன் முயற்சித்துள்ள நிலையில் குறித்த பரசூட் இயங்காததால் அவை கடலிற்குள் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களின் கடமைகள் இன்று ஆரம்பம்!
நீர் மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்தமையே மின் துண்டிப்புக்கு பிரதான காரணம் - மின்சக்தி அமைச்சர் தெரிவிப...
04 கப்பல் டீசல் தொகையைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!
|
|