கனடா மாநகரசபைத் தேர்தல்: இலங்கைத் தமிழர் வெற்றி!
Wednesday, February 15th, 2017
கனடாவின் ஸ்காபரோ- ரூஜ் ரிவர் மாநகரசபையின் 42 ஆவது வட்டாரத்துக்கான உறுப்பினரைத் தெரிவு செய்வதற்காக நேற்று நடந்த இடைத்தேர்தலில், இலங்கைத் தமிழரான நீதன் சன் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த இடைத்தேர்தலில் 29 பேர் போட்டியிட்டிருந்தனர். இவர்களில் நீதன் சன் 4,763 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இது மொத்த வாக்குகளில் 45.76 சதவீதமாகும். இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்களில் சுஹைர் சையத் என்ற வேட்பாளர், 1452 வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றார்.
இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற நீதன் சன்னுக்கு, மாநகர முதல்வர் ஜோன் ரொரி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அத்துடன் ரொறன்ரோ மாநகரத்தில் தெரிவாகியுள்ள முதல் தமிழர் நீதன் சன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
அமெரிக்கா-ரஷ்யா இடையே கடும் வார்த்தைப்போர்!
முஸ்லிம் தடை குறித்த வாசகங்கள்: டிரம்ப் வலைத்தளத்திலிருந்து தற்காலிக நீக்கம்!
ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு சிறை தண்டனை!
|
|
|


