கனடா மசூதியில் துப்பாக்கிச் சூடு: அறுவர் பலி!
Monday, January 30th, 2017
கனடாவின் கியூபெக் சிட்டிக்கு வெளியே உள்ள ஒரு மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் என்றும் மேலும் எட்டு பேர் காயமடைந்தள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கனடா பிரதமர் ஜுஸ்டின் ட்ரூடோ முஸ்லீம்களுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல் என்று இதை வர்ணித்து அதைக் கண்டனம் செய்தார். இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக போலிசார் கூறினர்.
சேன்ஃபோய் புறநகர்ப் பகுதியில் உள்ள இஸ்லாமிய கலாசார மையத்தில் உள்ள மசூதியில் மாலை தொழுகை நேரத்தில் துப்பாக்கிதாரிகள் சுட ஆரம்பித்தனர்.
அந்தக் கட்டடத்துக்கு வெளியே பல டஜன் கணக்கானோர் இருந்ததாக செய்திகள் கூறுகின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரமலான் பருவத்தின்போது, இந்த மசூதியின் கதவருகில் பன்றியின் தலை ஒன்று போடப்பட்டிருந்தது.

Related posts:
கோர விபத்திலிருந்து தப்பித்த இரு விமானங்கள்!
எரிவாயு கசிந்து தீவிபத்து - 5 பேர் பலி!
ரஷ்யாவின் புதிய ஒரியன் ஆளில்லா போர் விமானம் - போரின் தன்மைகளையே அடியோடு மாற்றியமைக்கும் திறன் கொண்ட...
|
|
|


