கனடாவில் வெளிநாட்டவர்கள் சொத்துக்கள் வாங்க தடை – கஉடிய அரசு அறிவிப்பு!
Monday, January 2nd, 2023
கனடா நாட்டில் வெளி நாட்டு முதலீட்டாளர்கள் ஏராளமான சொத்துக்கள் வாங்கி குவித்தனர். மேலும் பல்வேறு நாட்டை சேர்ந்த அரசியல் வாதிகள் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் என பலர் சொத்துக்கள் வாங்கியுள்ளனர்.
இதன் காரணமாக கனடாவில் வீடுகள் மற்றும் சொத்துக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. கடந்த ஆண்டு மட்டும் வீட்டு விலைகள் 20 சதவீதம் உயர்ந்தது.
அதேபோல் வீட்டு வாடகையும் கணிசமான அளவு அதிகரித்தது. இதனால் கனடா நாட்டினர் தங்கள் சொந்த நாட்டில் சொத்துக்கள் வாங்க கடும் சிரமத்தை சந்தித்தனர்.
இதையடுத்து சொத்துக்கள் விலை உயர்வால் ஏற்பட்டு உள்ள பிரச்சினைகளை குறைக்கும் வகையிலும் சொந்த நாட்டினருக்கு உதவும் நோக்கத்திலும் கனடா அரசு வெளிநாட்டினர் சொத்துக்கள் வாங்க தடை விதிக்க முடிவு செய்தது.
இதற்கான சட்டம் இயற்றப்பட்டு அது அமுலுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் கனடாவில் இனி வெளிநாட்டினர் சொத்து வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கனடாவில் குடியேறியவர்கள் மற்றும் நிரந்தரமாக வசித்து வரும் வெளிநாட்டினருக்கும் இந்த தடை பொருந்தாது என அறிவிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


