கத்தார் விமானத்தில் கோளாறு: துருக்கியில் தரையிறக்கம்!

கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக துருக்கியில் அவசரமாக தரையிறங்கியது.
இஸ்தான்புல்லில் இருந்து ஏ-330 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அதன் இயந்திர பகுதியில் தீ பொறி வெளியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
தோஹாவுக்கு சென்ற விமானம் இந்த சம்பவத்துக்கு பின் இஸ்தான்புல்லில் உள்ள அடாடர்க் விமான நிலையத்திற்கு திரும்பியது. இந்த விமானம் பத்திரமாக தரையிறங்கியதாகவும், விமானத்தை விட்டு பயணிகள் சகஜமாக வெளியேறியதாகவும் கத்தார் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது
Related posts:
எவரெஸ்ட் ஏறமுயன்ற இந்தியர் உட்பட இருவர் மரணம: இருவரைக் காணவில்லை!
அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - உலகம் முழுவதும் 8 இலட்சத்து 72 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி!
பிரித்தானிய தேம்ஸ் நதி தீவில் பாரிய தீவிபத்து!
|
|