கணனி வழி ஊடுருவல்களின் தாக்கத்தை குறைத்து மதிப்பீடு செய்ததாக ஒபாமா கருத்து!

கணினி வழி ஊடுருவல்கள் மற்றும் தவறான தகவல்கள் ஜனநாயகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை தான் குறைத்கு மதிப்பிட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனால், ரஷ்யா அதிபர் புதினை குறைவாக மதிப்பிடவில்லை என்றும், அதிபர் தேர்தல் பரப்புரையில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்றும் அமெரிக்க தொலைக்காட்சியான ஏபிசிக்கு அளித்த பேட்டியில் ஒபாமா கூறியுள்ளார்.
தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற ஒரு விரிவான கணினி வழி ஊடுருவல்களுக்கு அதிபர் புதின் தானாகவே உத்தரவு பிறப்பித்ததாக அமெரிக்க புலனாய்வு அமைப்பானது முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தது.
புலனாய்வு அமைப்பின் கண்டுபிடிப்புகளை டிரம்ப் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், இதுகுறித்து அவர் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் பணியாளர்களுக்கான தலைமை பொறுப்பை ஏற்கவுள்ள ரெய்ன்ஸ் பிரீபஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
Related posts:
பொலிசார் பயணம் செய்த விமானம் மாயம்!
துப்பாக்கிச் சூடு - இத்தாலியில் 6 பேர் காயம்!
காசாவில் இஸ்ரேல் நடத்திய குற்றங்கள் குறித்து பாரபட்சமற்ற சர்வதேச விசாரணைக்கு கட்டார் அழைப்பு !
|
|