கட்டிட விபத்து: கம்போடியாவில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

கம்போடியாவில் 7 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்த அனர்த்தத்தில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தவிர, மேலும் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் செய்திகள் கூறுகின்றன.
படுகாயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவதரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடமே இடிந்து வீழ்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பலியானவர்களில் பலர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
Related posts:
எங்களை காப்பாற்றுங்கள்..! மேயர் செர்ஜியோ பிரோசி கண்ணீருடன் வேண்டுகோள்!
பிரித்தானியாவில் தாக்குதல் - பலர் பலி!
இந்தியாவுடன் பல முக்கிய விடயங்களில் ஒன்றிணைய பைடன் விருப்பம்!
|
|