கட்டார் சர்ச்சையை நிறைவுக்கு கொண்டுவர முயலும் துருக்கி !

Monday, July 24th, 2017

 

சவூதி அரேபியா உள்ளிட்ட நான்கு நாடுகள் மற்றும் கட்டாருக்கு இடையிலான சர்ச்சையை நிறைவுக்கு கொண்டுவரும் பொருட்டு துருக்கி உதவி புரியும் என ஜனாதிபதி தையீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இஸ்தான்புல்லில்  நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் மற்றும் 24 ஆம் திகதிகளில் சவூதி அரேபியா, குவைத் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு தையீப் எர்டோகன் விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே நேற்று மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார்.

கட்டாரை ஏனைய நாடுகள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்த்த போதும் துருக்கி முழு ஆதரவு தெரிவித்து வந்தது. அத்துடன், குறித்த சர்ச்சையை தீர்க்கும் வகையில் சவூதி உள்ளிட்ட நான்கு நாடுகள் விதித்த 13 நிபந்தனைகள் தொடர்பிலும் துருக்கி கடும் விமர்சனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், குறித்த சர்ச்சை விவகாரம் தற்காலிகமானது எனவும் அதனால் துருக்கியில் முதலீடு செய்வதில் சவூதி, ஐக்கிய அரபு இராஜ்ஜியம், எகிப்து மற்றும் பஹ்ரேன் அக்கறை செலுத்த வேண்டும் எனவும் எர்டோகன் கோரியுள்ளார்.

Related posts: