கட்டாயப்படுத்தியே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தனர்! ஓபிஎஸ் பரபரப்பு தகவல்!

Wednesday, February 8th, 2017

முதலமைச்சர் பதவியை வலுக்கட்டாயமாக இராஜினாமா செய்ய வைத்தனர் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதிக்கு முன்னால் நீண்ட நேரம் மௌன அஞ்சலி செலுத்திவருகின்றார்.

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆன்மாவின் உந்து சக்தியால் தான் நான் இங்கு வந்தேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது ஏன் மாற்று ஏற்பாடு என்றேன் அசாதாரண சூழ்நிலையில், ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றார்கள்.

கிட்டத்தட்ட அரைமணி நேரம், நான் அழுது புலம்பினேன். முதல்வர், பொது செயலாளர் என இரு பொறுப்பையும் என்னை ஏற்று நடத்த சொன்னார்கள். மாண்புமிகு அவைத் தலைவர் மதுசூதனனை பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என சொன்னார்கள்.

எனினும், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் திவாகரன் போன்றோர். சசிகலாவை பொதுசெயலாளராக ஆக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். நான் சசிகலாவிடம் இதை சென்று சொன்னபோது, அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.

தமிழகத்தை காப்பாற்ற நான் தன்னம் தனியே போராடுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். மக்களும், தொண்டர்களும் விரும்பினால் என்னுடைய ராஜினாமாவை திரும்பப் பெறுவேன். நான் செய்த நற்பணிகளில் சிலருக்கு பிடிக்கவில்லை. இவ்வாறு பல பரபரப்புத் தகவல்களை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Siragu-sasikala

Related posts: