கடும் வெள்ளம் : நியூசவுத் வேல்சில் மாநிலத்திற்கு அவசர நிலை பிரகடனம்!

Wednesday, February 5th, 2020

நியூசிலாந்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளம் காரணமாக தென் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறவேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் அங்கு சென்றுள்ள சுற்றுலாப் பயணிகளும் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 60 மணித்தியாலங்களில் நியூசிலாந்தில் 1000 மில்லிமீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் ஆற்றங்கரைகள் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலவும் கடுமையான வானிலை காரணமாக சவுத்லேன்ட் மாநிலத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: