கடும் பனியில் சிக்கி உடல் உறைந்து சுவிஸில் இருவர் பலி!!

Monday, August 8th, 2016

சுவிட்சர்லாந்தில் கடுமையான பனியில் சிக்கி பிரித்தானிய நாட்டை சேர்ந்த் இருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய நாட்டை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் சுவிட்சர்லாந்திற்கு அருகில் உள்ள Matterhorn என்ற மலைப்பகுதியில் கடந்த வியாழன் அன்று பனிச்சறுக்கு விளையாட சென்றபோது காணாமல் போயுள்ளனர். இருவரையும் தேடும் பனியில் மீட்புக்குழுவினர் ஈடுப்பட்டபோது கடுமையான குளிர் வீசியதால், தேடுதல் பணி தடைப்பட்டது.

இந்நிலையில், நேற்று இருவரையும் தேடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டு ஹெலிகொப்டரில் மீட்புக் குழுவினர் சென்றுள்ளனர். சில மணி நேரங்களுக்கு பிறகு, சுமார் 4,000 மீற்றர் ஆழத்தில் இரண்டு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

உடல்களை ஆராய்ந்தபோது அவை காணாமல் போன இரண்டு பிரித்தானியர்கள் என உறுதி செய்யப்பட்டது. மேலும், கடுமையாக பனி வீசியதால், அவர்கள் இருவரும் உடல்கள் உறைந்து பலியாகியுள்ளதும் தெரியவந்துள்ளது.

உடல்களை மீட்ட பொலிசார் அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.பனிமலைகளில் விளையாட்டில் ஈடுப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 1865 முதல் தற்போது வரை 500 நபர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Related posts: