கஞ்சா விற்பனைக்கு அனுமதி : நாடாளுமன்றம் ஒப்புதல்!
Tuesday, June 12th, 2018
கஞ்சா விற்பனை செய்வதற்கு கனடா நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
கஞ்சா மூலிகையை பயிரிட்டு விற்பனை செய்யவும், கொள்வனவு செய்து பயன்படுத்தவும் சட்டபூர்வ அனுமதியளிக்கும் சட்டமூலம், கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கனடாவில் மருத்துவத்துக்காக கஞ்சாவைப் பயன்படுத்த ஏற்கனவே அனுமதியுள்ளது.
இதேவேளை ஹவுஸ் ஆஃப் காமென்ஸ் உறுப்பினர்களின் அங்கீகாரமும் கிடைத்துவிட்டால், கஞ்சாவை சட்ட ரீதியாக பெறலாம்.
புகையிலை பொருட்கள் மற்றும் மது போன்று இனி சர்வ சாதாரணமாகக் கஞ்சாவும் கிடைக்கும். மதுபானசாலைகளில் கஞ்சாவை உரிய அனுமதியுடன் பயன்படுத்த புதிய உத்தரவு பிறப்பிக்கலாம் என்று கனடா அரசு தெரிவித்துள்ளது.
போதைப் பொருட்களில் முக்கியமானதாக கஞ்சா கருதப்படுகிறது.
மருத்துவத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட கஞ்சா நாளடைவில் அளவுக்கு அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டது. அதன் ஆபத்தை அறிந்து, சில நாடுகள் அதற்கு தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


