பிரான்ஸ் தேர்தல்: பெரும்பான்மையை நோக்கி மக்ரோனின் கட்சி

Tuesday, June 13th, 2017

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலின் முதல் சுற்று முடிவில், அந்நாட்டு ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் முன்னிலையில் உள்ளார்.

இதற்கமைய, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெறும் இலக்கை நோக்கி அவரது கட்சி முன்னேறி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடத்த பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் என் மார்ச் கட்சியைச் சேர்ந்த இம்மானுவேல் மக்ரோன் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் பிரான்ஸின் இளம் ஜனாதிபதி என்ற பெருமையும் மக்ரோனுக்கு கிடைத்தது.
அந்தத் தேர்தலை தொடர்ந்து பிரான்ஸில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.

காலை 08.00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 08.00 மணிவரை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணும் நடவடிக்கைகளில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனின் கட்சி தொடர்ந்து முன்னிலையில் வகித்து வருகிறது.

முதல் சுற்று முடிவில் மக்ரோன் கட்சி 32.32% வாக்குகள் பெற்றுள்ளது. பிரான்ஸின் பிற கட்சிகளான பிரண்ட் நேஷனல் 13.20%, வாக்குகளும் சோஷியலிஸ்ட் கட்சிக்கு 9.5% வாக்குகளும் கிடைத்துள்ளன.

இரண்டாம் சுற்று முடிவுகள் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும்.
பிரான்ஸ் பாராளுமன்றத்தின் மொத்தமுள்ள 577 தொகுதிகளில் 445 தொகுதிகளில் மக்ரோனின் கட்சி வெற்றி பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: