ஒவ்வொரு ஏழு வினாடிகளுக்கு ஒரு இளவயது திருமணம் நடைபெறுகின்றது – Save the Children!
Tuesday, October 11th, 2016
உலகம் முழுவதும், ஒவ்வொரு ஏழு வினாடிகளுக்கும் பதினைந்து வயதிற்குக் கீழ் உள்ள ஒரு சிறுமிக்குத் திருமணம் நடைபெறுவதாக ‘சேவ் தி சில்ட்ரன்’ (Save the Children ) என்ற தொண்டு நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பத்து வயதேயான, பெண் குழந்தைகள் அவர்களை விட வயது அதிகமான ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்தத் திருமணத்தால், அந்தப் பெண் குழந்தைகளுக்குக் கல்வி மறுக்கப்படுகிறது என்றும் பாலியல் வல்லுறவுக்கும், குடும்ப வன்முறைக்கும் ஆளாகும் நிலைக்கு அவர்களை இது தள்ளுகிறது என்றும் கூறியுள்ளனர்.
மோதல்கள் மற்றும் ஏழ்மை போன்றவை தான், ஆப்கானிஸ்தான், ஏமன் , இந்தியா மற்றும் சோமாலியாவில் , அதிக அளவில் நடக்கும் சிறுமிகள் இளவயது திருமணத்திற்கு காரணம் என்று அந்த அறிக்கை குற்றம்சாட்டுகிறது.

Related posts:
பங்களாதேஷ் பிரதமரை கொலை செய்ய முற்பட்ட சம்பவம் - 11 பேருக்கு 20 வருட சிறை!
5000 பேர் படுகொலை!! பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளுக்கு எதிரான யுத்தம் முழு உலகிற்கும் முன்னு...
ட்ரம்ப் – கிம் சந்திப்பு இம்மாத இறுதியில்!
|
|
|


