ஒலிம்பிக் தீபத்தை திருட முயற்சி!
Monday, July 25th, 2016
சௌம் பௌலோ மாநிலம் வழியாக கடந்து செல்லுகிறபோது, ஒலிம்பிக் தீபத்தை திருட முயன்ற ஒருவரை பிரேசில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தடுப்பு வேலியை உடைத்து வந்து, தீபத்தை ஏந்தி ஓடி வந்தவரை அடைய முயன்ற ஒருவர், பாதுகாப்பு பணியாளரால் தடுத்து அடக்கப்படுவது காணொளி காட்சியாக வெளியிடப்பட்டுள்ளது.
அவரை மடக்கி பிடித்து அப்புறப்படுத்திய பிறகு, ஒலிம்பிக் தீப ஓட்டம் தொடர்ந்தது. இந்த ஒலிம்பிக் தீபமானது, ஒலிம்பிக் விளையாட்டுக்கள் தொடங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக, ஆகஸ்ட் மாதம் நான்காம் நாள் ரியோ டி ஜெனிரோவை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு கடும் எதிர்ப்புகள்!
அமெரிக்க அதிபரை பதவி நீக்கக்கோரும் தீர்மானம் நிறைவேறியது !
முதல் காலாண்டில் பொருளாதாரத்தில் மதிப்பீட்டைவிடவும் சீனா பாரிய வளர்ச்சி கண்டுள்ளது - சீனாவின் தேசிய...
|
|
|


