முதல் காலாண்டில் பொருளாதாரத்தில் மதிப்பீட்டைவிடவும் சீனா பாரிய வளர்ச்சி கண்டுள்ளது – சீனாவின் தேசிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, April 16th, 2024

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சீனப் பொருளாதாரத்தில் மதிப்பீட்டைவிடவும் பாரிய வளர்ச்சி கண்டுள்ளதாக சீனாவின் தேசிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான பொருளாதார வளர்ச்சி 4.8 வீதமாக மதிப்பிடப்பட்ட நிலையில் 5.3 வீதமாக சீன பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது.

உலகின் சிறந்த பொருளாதாரங்களில் இரண்டாவது வளர்ச்சி வீதம் எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

கொவிட் தொற்றின் காரணமாக பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்ட சீனப் பொருளாதாரம் மீண்டெழுந்துள்ளமை சிறப்பம்சமாகும்.

கடந்த வருடத்தை விட ஏற்றுமதிகள் 7.5% சரிந்ததாக சீனா அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் பொருளாதார வளர்ச்சி குறித்த தரவுகள் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக அமையப்பெற்றுள்ளன.

வலுவான முதல் காலாண்டு வளர்ச்சியானது தற்போதைய சீன அரசாங்கத்தின் நிலையான கொள்கைகுக்கு வசதியாக காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு உற்பத்தியின் அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதி ஆண்டுக்கு 14 வீதம் அதிகரித்து வருவதால் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு, பணவீக்கம் குறைவு மற்றும் இறக்குமதிகளில் கட்டுப்பாடு போன்றனவும் சீனப் பொருளாதார வளர்ச்சிக்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

000

Related posts: