இலங்கையின் முதலாவது செயற்கை புற்தரை மைதானம்!

Sunday, March 25th, 2018

கொழும்புக் கோட்டை, பெத்தகானவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை புற்தரை கொண்ட உதைப்பந்தாட்ட மைதானத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர உத்தியோகபூர்வமாக திறந்துவைத்துள்ளார். இந்த மைதானமானது சர்வதேச உதைப்பந்தாட்ட போட்டிகளை நடத்துவதற்கு உகந்த வகையில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் நிதி உதவியினால் உருவாக்கப்பட்டுள்ளது.

சர்வதேச உதைப்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை ரூபாயில் சுமார் 7.5 கோடிகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 40 வீரர்கள் மற்றும் 15 அதிகாரிகள் தங்கியிருந்து பயிற்சிகளைப் பெறுவதற்கான அனைத்து வசதிகளும் இந்த மைதானத்தில் இடம்பெற்றுள்ளது. தங்குமிடம், உடற் பயிற்சி கூடம் மற்றும் கேட்போர்கூடமொன்றும் இந்த உதைப்பந்தாட்ட மைதான வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.ஶ்ரீ

செயற்கை புற்தரை மைதானத்தில் ஒரு கண்காட்சி போட்டியொன்றும் நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் அணி, உதைப்பந்தாட்ட அதிகாரிகள் அணியை 6-1 என வீழ்த்தி வெற்றிப்பெற்றுள்ளது. இலங்கையின் காற்பந்தாட்ட நிலையை சர்வதேசத்திற்கு இட்டுச்செல்லும் நோக்கில் சர்வதேச காற்பந்து சம்மேளம் அனுசரணை வழங்கிவருகின்றது

Related posts: