ஒரே பாஸ்போர்ட் – தலைவர்கள் ஆலோசனை!

Sunday, July 17th, 2016

ஆப்பிரிக்க நாட்டு பிரஜைகள் அனைவருக்கும் ஒரே பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் குறித்து, ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாட்டிற்காக ஆப்பிரிக்கத் தலைவர்கள் ருவாண்டாவின் தலைநகரான கிகாலியில் கூடவுள்ளனர்.

தெற்கு சூடான், புரூண்டி மோதல்கள் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றிய பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்துவது ஆகியவற்றை இந்த உச்சி மாநாடு கவனத்தில் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் சுதந்திரமாக சென்று வர வசதியளிப்பது, ஆப்பிரிக்கக் கண்டத்திற்குள் வர்த்தகத்தை அதிகரிக்க ஊக்கமூட்டுவது ஆகியவை ஆப்பிரிக்க குடிமக்கள் அனைவருக்குமான இந்த பாஸ்போர்ட்டின் நோக்கமாகும்.

தொடக்கத்தில் இது நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றிய மூத்த அதிகாரிகளுக்கு வழங்கப்படும். இந்த பாஸ்போர்ட் முழுமையான செயல்பாட்டிற்கு வருவதற்கு அதிக ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உச்சி மாநாட்டில் தற்போதைய ஆப்பரிக்க ஒன்றியத் தலைவர் நிக்கோசேசினா தோமினி ஸூமா பதவி விலகி புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்

Related posts: