ஒடிசாவில் நிலநடுக்கம் : மக்கள் வீதிகளில் தஞ்சம்!

ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் நேற்று 4.40 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சமடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தின் மையம் ராயகடா மாவட்டத்தில் காசிபூர் பகுதியில் அமைந்திருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என ஒடிசா மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
விமான விபத்து – கென்யாவில் 5 பேர் உயிரிழப்பு!
கத்திக்குத்து தாக்குதல் - ஜப்பானில் இருவர் உயிரிழப்பு!
நைஜீரியாவில் துப்பாக்கிச் சூடு - 65 பேர் பலி!
|
|