ஐ.நா.வின் புதிய செயலாளர் இன்று அதிகாரபூர்வ தெரிவு!

தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளராக பான் கீ மூன் செயற்பட்டு வரும் நிலையில் அவரின் பதவி காலம் எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகின்றது. இதனடிப்படையில் குறித்த வெற்றிடத்திற்கு புதிய பொதுச்செயலாளராக அன்டோனியோ குட்டெரெஸ் இன்று முறைப்படி தெரிவு செய்யப்படவுள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த புதிய செயலாளரை தெரிவு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச்செயலாளராக போர்த்துக்களின் முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ் கடந்த 5ஆம் திகதி பாதுகாப்பு சபையால் தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச்செயலாளராக அன்டோனியோ குட்டெரெஸ் இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவு செய்யப்படவுள்ளார். பான் கீ மூனை தொடர்ந்து குட்டரெஸ் ஐக்கிய நாடுகள் சபையில் 9வது பொதுச்செயலாளராக பதவியேற்க உள்ளார். இவரது பதவிக் காலம் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முடிவடையவுள்ளது.
முன்னதாக அன்டோனியோ குட்டெரெஸ் போர்த்துக்களின் பிரதமராக 1995ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். அத்துடன், அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையராக 2005ஆம் ஆண்டு முதல் 2015 வரை பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|