துருக்கி அதிபர் தேர்தல்: எர்டோகன் வெற்றி!

Wednesday, June 27th, 2018

துருக்கி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எர்டோகன் அந்நாட்டு அதிபராக மீண்டும் பொறுப்பேற்க உள்ளார். ஆசிய நாடான துருக்கியில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது.

அதில் நீதி மற்றும் முன்னேற்ற கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் எர்டோகன் மற்றும் மதச்சார்பற்ற குடியரசு மக்கள் கட்சியை சேர்ந்த முகர்ரம் இன்ஸ் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது.

தேர்தலில் 99 சதவீதம் ஓட்டுகள் பதிவான நிலையில் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் அதிபர்இ எர்டோகன் 52.5 சதவீத ஓட்டுகளும் எதிர்க் கட்சித் தலைவர் முகர்ரம் 31.5 சதவீத ஓட்டுகளும் பெற்றனர். எர்டோன் வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.இதையடுத்து துருக்கி அதிபராக எர்டோகன் மீண்டும் பதவியேற்க உள்ளார். தனக்கு ஓட்டளித்த மக்களுக்கு எர்டோகன் நன்றி தெரிவித்துள்ளார்.”தேர்தலில் தோல்வி அடைந்தாலும் ஜனநாயக முறைப்படி மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்” என எதிர்க் கட்சித் தலைவர் முகர்ரம் கருத்து தெரி வித்துள்ளார்.

Related posts: