ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் அமெரிக்க பிரஜைகள் விசா பெறும் நடைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் – ஐரோப்பிய நாடாளுமன்றம்!
Friday, March 3rd, 2017
ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யும் அமெரிக்க பிரஜைகள், விசா பெற வேண்டிய நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றியத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் ஐரோப்பிய ஒன்றியம், இரண்டு மாதங்களில் இந்த நடவடிக்கையை அமுல்படுத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளாகிய பல்கேரியா, க்ரோஷியா, சிப்ரஸ், போலந்து மற்றும் ரூமானியா ஆகிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் செல்வதற்கு விசா தேவை என்ற போதிலும் அமெரிக்கர்கள் விசா இன்றி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முடியும். பரஸ்பர விசா ஏற்பாடுகளால் சில உறுப்பு நாடுகள் பயன் அடையவில்லை என்ற காரணத்தை முன்வைத்து ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றியத்திடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

Related posts:
மீண்டும் ஏவுகணை ஏவியது வடகொரியா!
கடன் நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான உடனடி உதவிகள் குறித்து ஜி - 7 நாடுகள் மீளவும் வலியுற...
மோடியின் பதவியேற்பு திகதியில் மாற்றம் - எதிர்வரும் 9 ஆம் திகதி மாலை பதவியேற்பு விழா - புதுடில்லி செல...
|
|
|


