ஒடிசாவில் பேருந்து கால்வாயில் வீழ்ந்து விபத்து: 21 பேர் பலி!
Friday, September 9th, 2016
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் ஆங்குல் மாவட்டத்தில் உள்ள மனித்ரி பகுதியில் பேருந்து ஒன்று பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது 50 அடி கால்வாயில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 21 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் காயமடைந்த 25 பேரில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.விபத்து நடந்த இடத்திலேயே 14 பேரும், காயத்தினால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் 7 பேரும் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்களில் தெரியவந்துள்ளது.
சுமார் 50 பேருடன் பாலத்தில் பயணித்த போது நெரிசல் காரணமாக ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவற்றில் பஸ்ஸினை மோதியுள்ளார். இதன்போது, பஸ் சுவற்றை உடைத்துக் கொண்டு கால்வாயில் வீழ்ந்துள்ளது.

Related posts:
தமிழக சட்டசபை தேர்தல் மதியம் 1 மணி நிலவரப்படி 42.1 சதவீத வாக்குப்பதிவு
கியூபாவில் விமான விபத்தில் 100- க்கும் மேற்பட்டோர் பலி - கியூபாவில் சோகம்!
உலக சனத்தொகையில் பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு - உலக சுகாதார அமைப்பு கவலை!
|
|
|


