ஐரோப்பிய உச்சி மாநாட்டில் ஒபாமா!

நேட்டோ ஒத்துழைப்பு, உக்ரேனில் ரஷ்ய தலையீட்டை அடுத்து ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகள் ஆகியவற்றை அப்படியே பராமரிப்பதை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவோடு இணைந்து ஐரோப்பிய தலைவர்கள் பெர்லினில் உறுதிசெய்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வென்ற பிறகு, அமெரிக்க கொள்கைகள் மாறுபடலாம் என்ற பயம் கிளம்பியிருக்கும் நிலையில் நடைபெறுகின்ற ஐரோப்பிய தலைவர்களின் முதல் உச்சி மாநாடு இதுவாகும்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்கும்போது, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் அவரோடு பணியாற்ற வேண்டும் என்று ஒபாமா வலியுறுத்தியுள்ளார். அட்லாண்டிக் கடந்த செயல்பாட்டை முன்னெடுத்து செல்வது, சிரியா மற்றும் கிழக்கு உக்ரேன் மோதல்களுக்கு தீர்வு காண்பது போன்றவை தொடர்பாக உடன்பாடுகள் எட்டப்பட வேண்டியிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.
Related posts:
பிரெக்சிற்றின் பின்னரான சட்டதிட்டங்கள் தொடர்பில் விளக்கம் தேவை: சிரேஷ்ட நீதிபதி!
அகதிகள் படகு கடலில் மூழ்கி விபத்து!
கொரோனா வைரஸ் : சீனாவை பாராட்டிய ஐக்கிய நாடுகள் சபை!
|
|