ஏவுகணை பாவனையை தொடர்பில் பிரித்தானியா- பிரான்ஸ் முக்கிய ஒப்பந்தம்!
Friday, February 24th, 2017
விமானப்படையினரால் பயன்படுத்தப்பட்டுவரும் நீண்டதூர ஏவுகணைகளை மேம்படுத்தும் வகையில் பிரித்தானியாவும், பிரான்ஸும் ஐரோப்பிய பன்னாட்டு ஆயுத உற்பத்தி நிறுவனமொன்றுடன் முக்கிய ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
பிரான்ஸ் ஊடான பலகட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து 146 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக இராணுவதளபாடக்கொள்வனவிற்கு பொறுப்பான பிரித்தானிய அமைச்சர் குறிப்பிட்டார். ஆயுத படையினருக்கு உரியநேரத்தில் உரிய உபகரணங்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பான அரசின் 178 பில்லியன் பவுண்ட் திட்டத்தின் முக்கியபகுதியாக விளங்குவதாக பிரித்தானிய அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
மேற்படி ஒப்பந்தமானது இருதரப்பிலும் 50 மில்லியன் பவுண்ட் சேமிப்பை ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts:
பிரான்ஸில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட இருவர் பலி, மூவர் மாயம்!
புகையிரதத்தில் தீ விபத்து - 20 பேர் பலி!
அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல் மற்றும் கனமழை - திணறும் மக்கள்!
|
|
|


