ஏமனில் தீவிரவாதிகள் மீது அமெரிக்க கொமாண்டோ தாக்குதல்- 41 பேர் பலி!

மத்திய ஏமனில் அமெரிக்க கொமாண்டோக்கள் நடத்திய தாக்குதல் சம்பவம் ஒன்றில் 40க்கும் மேற்பட்ட அல்–கய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஏமன் அதிகாரிகள் மற்றும் பழங்குடியின தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல்-பைடா மாகாணத்தில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கையில் பல அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.யாக்லா மாவட்டத்தில் 45 நிமிடங்களுக்கு நீடித்த இந்த சண்டையில் பலியானவர்களில் மூன்று அல்-கய்தா தலைவர்களும் அடங்குவார்கள்.
ஆனால், இந்த தாக்குதல் நடவடிக்கை குறித்து இதுவரை அமெரிக்காவிடமிருந்து உறுதிப்படுத்தப்படவில்லை.ஏமனில் உள்ள அல்-கய்தா மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
41 தீவிரவாதிகள் மற்றும் 16 பொதுமக்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
கடாபி பேசிய இறுதிவார்த்தைகள்!
சிறுவர்கள் விடுதியில் பாரிய தீ விபத்து -10 சிசுக்கள் தீயில் கருகி பலி!
யுக்ரைன் - ரஷ்யாவின் இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று!
|
|