எம்மை அணு ஆயுத நாடாக அங்கீகரிக்க வேண்டும்- வடகொரியா!

Tuesday, September 13th, 2016

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறியும் ஐநா, அமெரிக்கா பொருளாதார தடை விதித்த போதிலும், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் அந்நாடு 5வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. இதனால் வடகொரியாவை ஒட்டியுள்ள தென் கொரியா, ஜப்பான் நாடுகளிடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே வடகொரியாவின் சோதனைக்கு ஐநா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.வட கொரியா நடத்திய அணுகுண்டு சோதனைக்கு தண்டனை அளிக்கும் விதமாக தன்னிச்சையான செயல்பாடுகளை முன்னெடுக்க அமெரிக்கா ஆலோசித்து வருவதாக வட கொரியாவுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் தெரிவித்திருக்கிறார்.

 இந்நிலையில் வடகொரியாவின் வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் நேற்று விடுத்த அறிக்கையில், ‘அணு ஆயுத நாடாக வடகொரியாவுக்கு சட்டப்படியான அங்கீகாரம் கிடைத்து விடாமல் தடுக்க அமெரிக்க அதிபர் ஒபாமா கடின முயற்சிகளை மேற்கொள்கிறார். அவரது இந்த செயல், உள்ளங்கையால் சூரியனை மறைப்பது போன்ற முட்டாள்தனமான காரியம்’ என்றார். சர்வதேச எதிர்ப்பை மீறி, அணுகுண்டு சோதனைகள் தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காகவே நடத்தப்படுகின்றன என வடகொரியா கூறி வருகிறது.

அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அணு ஆயுத நாடுகள் என்ற அங்கீகாரம் வழங்கும்போது, தங்களுக்கும்அது வழங்க வேண்டும் என்று வடகொரியா கூறியுள்ளது.

30-north-korea-600

Related posts: