என் அறைக்குள் யாரோ நுழைவதுபோல் தெரிகிறது-கொலை செய்யப்பட்ட ரசிலாவின் இறுதி வார்த்தைகள்!

Tuesday, February 7th, 2017

புனேவில் இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ரசிலா இறப்பதற்கு முன்னர் பேசிய கடைசி உரையாடல் குறித்து அவரது உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.

பூனே இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 25 வயதான ரசிலா, ஜனவரி 29-ம் திகதி தன் அலுவலக கேபினில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

பாதுகாவலர் சாய்கியா பாபின் தான் இவரை கொலை செய்தார் என பொலிசார் அவரை கைது செய்தனர்.

இந்நிலையில், அவரது கடைசி உரையாடல் குறித்து அவரது உறவினரான அஞ்சலி நந்தகுமார் கூறியதாவது, நான் இன்று சமர்ப்பிக்கும் வேலையைப் பொறுத்துதான், நான் பெங்களூருக்கு பணியிடமாற்றம் பெறுவதற்கான சாத்தியங்கள் நிறுவனத்திடமிருந்து பிப்ரவரி முதல் வாரத்தில் கிடைக்குமா என்பது தெரியும் என கூறிய சில நிமிடங்களிலே, ‘என் அறைக்குள் யாரோ நுழைவதுபோல் தெரிகிறது. நான் சற்று நேரத்திற்குப்பின் அழைக்கிறேன்” என்று அவசர அவசரமாக அலைபேசியைத் துண்டித்திருக்கிறார்.

இவைதான் அவர் பேசிய கடைசி வார்த்தைகள். அதன்பின், இரவு 8:30 மணியளவில், கழுத்தை நெரித்து கொல்லப்பட்டு இருந்த அவரின் உயிரற்ற உடல் மட்டுமே அவரது பணியறையில் காணப்பட்டது.

ரசிலாவின் கொலை விடயத்தில் பாதுகாவலர் கைது செய்யப்பட்டாலும், மேலதிகாரிக்கு தங்கள் மகளின் மீது காழ்ப்புணர்ச்சி இருந்தது என்றும் பலமுறை அவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார் என எங்கள் மகள் அடிக்கடி கூறியுள்ளார் என ரசிலாவின் தந்தை கூறியது குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: