33 வருடங்களின் பின்னர் ஹொங்கொங்கை தாக்கிய பலம் வாய்ந்த சூறாவளி!

Tuesday, August 2nd, 2016

ஹொங்கொங்கை 1983 ஆம் ஆண்டின் பின்னர் பலம் வாய்ந்த சூறாவளியொன்று தாக்கியுள்ளது.

இந்த சூறாவளிக்கு நீடா எனப் பெயரிடப்பட்டுள்ளது. சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குவாங்டொங் மாகாணத்தில் உள்ள மக்களை உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை சேமிப்பில் வைத்துக்கொள்ளுமாறு எச்சரி்க்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீர் நிலைகளில் வெள்ளம் ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுவதால் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, ரயில் மற்றும் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: